ஒன்றரை மாதங்களுக்கு பின் மீண்டும் வந்துட்டேன் blog செய்வதற்கு. அப்ப exam stress ல blogging செம fun ஆக இருந்திச்சு. ஆனா இப்ப ஒரு வேலையும் இல்ல. ஆனாலும் Blog பண்ணுவதற்கு செம போரிங் ஆ இருக்கு.
என்னுடைய ரசிகர் வட்டத்தின் (ஒரே ஒரு member தாங்கோ, என்னோட sweet heart) அன்பு வேண்டுகோளுக்கிணங்க நான் மீண்டும் blog பண்ண போறேன்.
exam முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன். நான் தான் எங்க வீட்டு driver. மூன்று நாட்களாக கொழும்பு பயணம். நேற்று வந்து லேப்டாப் ஐ போட்டால் வேல செய்யவில்லை. இன்று அதையும் செய்துகொண்டு நீண்ட நாட்களுக்கு பிறகு சில நண்பர்களை சந்தித்தேன். என் நண்பனின் குட்டி மகளின் சேட்டைகளோடு காலை வேலை இனிதே சென்றது.
எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. யாராவது நண்பர்களை கண்டாள் அவர்களது வயிற்றை பற்றி கிண்டலடிக்காமல் இருக்க முடியவில்லை. exam க்கு முன்னர் நானும் அளவாக தான் இருந்தேன். அனால் இப்போது நானும் பெரிய வயிற்றுக்கு சொந்தக்காரனாகிவிட்டேன். exam முடிந்ததும் முதல் வேலையாக வயிற்றை குறைக்க நினைத்தேன். ஆனால் இனி இந்த பிறவியில் அது நடக்கவே நடக்காது போல் இருக்கிறது. சரி பாப்போம், சீனி நோய் வந்தாவது குறைகிறதா என்று.
exam முடித்து வந்தவுடன் சாரு நிவேதிதாவின் கடவுளும் நானும் என்ற புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த புத்தகத்தை முழுதாக வாசிக்கவில்லை. அறுவையாக இருந்தது. அவருடைய blog இற்கு சென்று பார்த்தேன். நிறைய பதிவுகள் இருந்தது. அவர் பல்வேறு பட்ட புத்தகங்களுக்கு அறிமுகம் தருகிறார். அவ்வாறு நான் சென்றடைந்தது தான் அன்டன் செகொவின் (Anton Chekov) சிறுகதைகள். லிங்க் தருகிறேன். 201 கதைகள் இருக்கின்றன. 10 கதைகள் வாசித்து விட்டேன். இன்னும் 191 இருக்கிறது. அனைத்தையும் வாசித்து முடிக்க ஆசை. பார்ப்போம் ஆசை நடக்கிறதா என்று.
இனி தொடர்ந்து அறுப்பேன்....
வாழ்த்துக்கள்....
பதிவுலகம் வரவேற்கிறது...தொடருங்கள்...வாழ்த்துகள்
ReplyDeletePlz remove the word verification for posting comments.
ReplyDeleteKindly change the template also if possible.
This is my small suggestion.
okay dacalti.. thanks for your suggestions..
ReplyDeletergds