இலங்கையின் மத்திய மலைநாட்டின் தலைநகர் என சொல்லப்படும் கண்டி நகருக்கு அருகாமையில் அமைந்திருக்கின்றது நான் தெரிவு செய்யப்பட்ட பல்கலைகழகம். இலங்கையின் Oxford, Cambridge, Harvard என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். அவ்வளவு சிறப்பு மிக்க பல்கலைக்கழகம். இயற்கை எழில் பொங்கும் அருமையான சூழலில் அமைந்திருக்கின்றது. வெள்ளைக்காரர் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அந்த காலத்திலேயே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மிகவும் கண்ணும் கருத்துமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நானும் சிறு வயதிலிருந்து கண்டி நகருக்கு செல்லும் போது எல்லாம் இந்த பல்கலைக்கழகத்தின் அழகை வாயில் நீர் சொட்ட சொட்ட பார்த்திருக்கிறேன். அம்மா, அப்பா எல்லாரும் சொல்லுவாங்க "நல்லா படி மகனே, அப்ப தான் இங்க வரலாம்" என்று. எப்படியோ படித்தாகிவிட்டது. கனவு கண்டது போல எனக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. கனவுகள் பொதிந்த இதயத்தோடு சென்றேன். இன்னொரு பக்கம் வாழ்க்கையில் settle ஆகிவிட்டது போல் ஒரு வித உணர்வு (அப்போதைய immature மனதிற்கு அப்படி தோன்றியது).
முதல் மூன்று மாதங்களுக்கு ஆங்கிலம் சொல்லி தருவார்கள். அதற்கு placement exam வைத்தார்கள். மெல்ல மெல்ல சுற்றி பார்த்தேன். எல்லாமே நன்றாக இருந்தது. புதுப்புது முகங்கள், புதிய சூழல் என எல்லாமே நன்றாக போய்கொண்டுடிருந்தது. எங்கள் immediate seniors இன் பழக்கம் கிடைத்தது. எனது சுதந்திரத்தில் அவர்கள் தலையிடுவது போல் உணர்ந்தேன். இரண்டு வாரங்களில் புரிய தொடங்கியது. என்னை அவர்கள் வழிக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் என்பது புரிந்தது. எங்களுக்கு வகுப்புகள் 8.30 மணிக்கு தான் தொடங்கும். அனால் அவர்கள் சொன்னார்கள் 7.00 மணிக்கு canteen க்கு வா என்று.
மூன்றாவது வாரம். எனடா இது வம்பா போச்சுன்னு நானும் இரண்டு மூன்று நாட்கள் சென்றேன். மெல்ல மெல்ல திட்ட தொடங்குகிறார்கள். Shirt அணி, belt கட்டாதே, watch கட்டாதே, shoe போடு என்று ஒவ்வொரு கட்டளை பிறப்பிக்க தொடங்கினார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒவ்வொன்றாக செய்ய தொடங்குகிறேன். 'விதிகள்' என்ற பெயரில் அவர்களது tradition களை எடுத்தியம்புகிறார்கள். அவர்கள் சொல்லிதத்ருவதை கேட்பதற்கு அருவருப்பாக இருக்கும். எப்படி சாப்பிடுவது, பேசுவது எப்படி, மலசலம் கழிப்பது எப்படி என சொல்லித்தருவார்கள். இன்னும் நிறைய சொல்லுவார்கள். நிறைய விஷயங்கள் மறந்துவிட்டது. மறக்க செய்தமைக்கு கடவுளுக்கு நன்றி.
நான்காவது வாரம். எனக்கு வெறுக்க தொடங்குகிறது. 'ஏண்டா இங்க வந்தோம்' என்று தோன்றியது. எனக்கு ஆரம்ப நாட்களிலேயே புரிய தொடங்கியது. ஆனால் பெரும்பான்மையானோருக்கு 3rd or 4th year இல் தான் புரியும். சில சமயங்களில் இதை சொல்லி நான் பெருமை அடித்து கொள்வதும் உண்டு. இவர்களது இந்த tradition இற்கு பெயர் சிங்களத்தில் 'நவக அனுறுபதா வெடசடகன்'. தமிழில் 'புதியவர்களை மறுசீரமைக்கும் திட்டம்'. ஆனால் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமலேயே அவர்களுடனேயே இருந்தேன். இல்லாவிட்டால் hostel இல் இருக்க விட மாட்டார்கள். முடிந்தவரை நான் தனியாகவே செயற்பட்டேன்.
அந்த சூழலில் எல்லாமே சூனியமாக தான் இருக்கும். நான் எது செய்தாலும் எல்லாரும் மூக்கை நுழைப்பார்கள். சுதந்திரமாக செயற்படவே விட மாட்டார்கள். இவ்வாறு நடந்து முடிய அங்கு சென்ற போது எனக்கு இருந்த நிறைய qualities காணாமல் போய் இருந்தது. உதாரணமாக, நான் school இல் இருக்கும் போது இனப்பாகுபாடு செய்து பார்ப்பது இல்லை. இங்கு வந்து முதலாவதாக நான் கற்று கொண்ட பாடம் எல்லோரையும் பிரித்து பார்ப்பது. சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று தனித்தனியாக பிரித்து பார்ப்பது. அதிலும் வடக்கு தமிழ், கிழக்கு தமிழ், மலயகத்தமிழ் என்று தனித்தனியாக தான் இருப்பார்கள். இதை தான் நான் முதலாவதாக படித்தேன். அடுத்து எனது ஆளுமை திறமைகள் எல்லாம் மழுங்கி போனது. ஆசிரியர்களுடன் சென்று பேசினால் வாலி வைக்கிறான் என்பார்கள். இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
இவ்வாறு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் போது செல்லும் போது இருந்ததை விட மோசமான ஒரு மனிதனாகவே வெளியேறுகிறோம். எங்கள் course கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் பெரும்பான்மையானோர் stuff-less மனிதர்களாகவே வெளியேறுகிறார்கள்.
அறுவை தொடரும்....
கமெண்ட்ஸ் ப்ளீஸ்...
நண்பா! யதார்த்தத்தின் உணா்வுகளுக்கு சுவாரஷ்யமாக உருவம் கொடுத்த உன்னை மெச்சாமல் இருக்க என்னால் முடியாது.
ReplyDelete