Sunday, December 5, 2010

It's a rainy day

Now it's pouring nonstop for more than 24 hours here in hatton. . Mountains covere d in a white carpet, not snow but mist. . ,its very energetic for a person like me, who likes to be at home. . Unfortunately i have to leave today. , i am going to miss this wonderful climate. , . Since morning its all white around me, . I couldn't spot anything beyond 10 metres. , its wonderful. , one more nice thing about this is its not very cold here. , you can just hang around without sweater. . .but you need an umbrella, .
Some people advice me to go abroad, . I do like, but when you encounter such an calm, nice climate you feel like leaving this place. , i don't know whats my destiny is. , i am feeling drowsy, . I have more than hours journey left. ,

Saturday, December 4, 2010

திரை விமர்சனங்கள் பற்றி.....

இன்று காலை நந்தலாலா மற்றும் பல திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களை பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒரே யோசனையாக இருந்தது. ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக விமர்சித்து இருக்கிறார்கள். யாவையும் வாசிப்பதற்கு jolly ஆக இருந்தது. எனக்கென்னவோ ஒரே உறுத்தல். திரைப்படங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கிறார்களோ தெரியவில்லை. இவர்கள் என்னவோ மனசுக்கு வந்தபடி திட்டித்தீர்க்கிறார்கள். அதிலும் ரொம்பவே கொடுமை எந்திரனையும் நந்தலாலாவையும் ஒப்பிட்டு விமர்சித்து இருந்தார்கள். என்ன கொடும சார்.

எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இது போன்ற விமர்சனங்களால் படம் எடுப்பவர்களுக்கோ, அதை விமர்சிப்பவர்களுக்கோ எது வித நன்மையோ தீமையோ வந்துவிடாது. ஆனால் பாதிக்கபடுபவர்கள் யார்??.. ஹலோ சார், என்ன யோசிக்குறீங்க???.. அது நாமதான் சார்... எங்கள் பொன்னான நேரத்தை வீனடித்துக்கொண்டு இவற்றை எல்லாம் வாசிக்கிறோம். அதிலும் என்னைப்போன்றவர்கள் ரொம்பவே முட்டாள்கள். அதை வாசித்துவிட்டு, அதற்கு ஒரு விமர்சனம் வேறு எழுதுகின்றோம். Double time waste.

எதுவாக இருந்தாலும் சரி, என்னை பொருத்தவரை எந்த ஒரு திரைப்படமானாலும் பரவாயில்லை. நடிப்பர்வர்கள் பற்றியோ, இயக்குனர் பற்றியோ, camera man, music director, etc. .. யாரை பற்றியுமே கவலை இல்லை. அனால் ஒரு திரைப்படம் பார்க்கிறவர்களை இரண்டரை மணிநேரம், எல்லாவற்றையும் மறந்துவிட்டு enjoy பண்ணுவதற்கு வழிவகுத்தால் போதும். அது விஜய் படமானாலும் சரி, ரஜினி படமானாலும் சரி.

விஜய் ஐ விமர்சிப்பவர்கள் மீது எனக்கு உடன் பாடில்லை. ஏனா, அவரது ரசிகர்கள் அவரை திரையில் கண்டு கும்மாளமிட்டு படத்தை enjoy பன்னி விட்டு தான் போவார்கள். அதில் இழப்பவர்கள் விஜய் ஐ விமர்சிப்பவர்கள் தான்.

சார் சொந்த அனுபவம் சார். அடுத்த மாதம் பரீட்சை என்பதால் ரொம்ப நாள் படங்கள் பார்க்கவில்லை. அனால் நேற்று ச்சும்மா ஒரு படம் பார்த்தேன். செம relax ஆக இருந்தது. அது தான் சார் ஊருக்கு உபதேசம் பண்ண கிளம்பிட்டேன். எந்த படம் என்பது முக்கியமில்லை. நாங்கள் enjoy பண்ணுவதில் தான் உள்ளது. என்ன இருந்தாலும் நம்ம காசு இல்லியா. அது நாலா நாங்க மோசமான திரைப்படம இருந்தாலும் சரி. enjoy பன்னி விட்டு வருவோம். இல்லாட்டி ஏசி ஏசி நம்ம health தான் வீனா போகும்.

வாசிச்சிட்டு நீங்க என்னை ஏசுங்க.

ச்சும்மா.........

நான் blogging இற்கு புதியவன் அல்ல. முன்னர் பல blogs தொடங்கினேன். ஆனால் எதையுமே நீண்ட நாட்கள் தொடரவில்லை. அதற்கெல்லாம் காரணம் blogging இல் பணம் சம்பாரிக்கலாம் என்ற நோக்கத்தோடு இறங்கினேன். அனால் முடியாமல் போய் விடவே அப்படியே விட்டு விட்டேன். அதனால் தான் இந்த முறை எனது blog இல் advertisements போடுவதில்லை என்ற முடிவோடு தொடங்கியிருக்கிறேன். பாப்போம் எப்பு....டி போகுதுனு.

Blog செய்வதற்கு topic இல்லாமல் தவிக்கிறேன். mmm...என்ன செய்ய, முதல் blog இற்கு கொஞ்சம் response வந்து உசுப்பேத்தி விட்டுவிட்டது. அடுத்த மாதம் இறுதியாண்டு பரீட்சைகள் இருக்கின்றது, Chitti சார் (நம்ம enthiran) தான் காப்பாத்தணும்.

என்னை பற்றி கொஞ்சம். நான் கருப்பா, கட்டையா, குண்டா இருப்பேன். பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயில்கிறேன். முடித்தவுடன் நான் பிறந்து வளர்ந்த இந்த மலையகத்திற்கு என் உயிருள்ளவரை சேவையாற்றுவதே என் வாழ்வின் குறிக்கோள் அப்டி சொல்ல மாட்டேன். இப்புடி சொல்லிக்கிட்டு நிறைய பேர் கிழம்பியிருக்காய்ங்கடா. அவர்கள் செய்யட்டும். நான் என்னால் முடிந்ததை செய்வேன். மற்றபடி நன்கு சம்பாதித்து, கல்யாணம் முடித்து எல்லோரையும் போலவே சாதாரண வாழ்க்கையே வாழ விரும்புகிறேன்.

Blogging என்பது ஒரு கொடுமை தான். என்ன மாதிரி எத்தன பேர் கிளம்பியிருக்காய்ங்களோ தெரியல. இந்த கொடுமை எல்லாம் வாசிக்க வேண்டி இருக்குது. ஆனால் உண்மையாகவே fun ஆக இருக்கின்றது.

வாசித்தால் மறக்காமல் ஏசி விட்டு செல்லுங்கள், உங்கள் நேரத்தை வீனடித்தமைக்கு. :-)

Friday, December 3, 2010

குடித்து கெட்ட மலையகம்

இலங்கையின் மத்தியில், உச்சியில் குளுகுளுவென்று அமைந்திருக்கின்றது அழகிய மலையகம். அழகிற்கு இங்கு குறையில்லை. இன்னொரு special என்னவெனில், குடித்தே கெட்ட ஒரு தமிழினம் இங்கு வாழ்கிறது.

அந்த அரும்பெரும் இனத்துக்கு ஒரு சின்ன intro. பத்தொன்பதாம் நூற்றாண்டில்  மாசிக்கு ஆசைப்பட்டு இந்தியவிலுருந்து குடும்பம் குடும்பமாய் வந்து சேர்ந்திருக்கிறார்கள் எமது முன்னோர்கள். மலையகத்தில் ஏது மாசி? ஆனால் வெள்ளைக்காரர்கள் ரெடியாக வைத்திருந்தார்கள் மாசியை விட சூப்பர் item ஒன்றை. எமது முன்னோர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மதுவிற்கு அடிமையானார்கள். ரொம்ம்ப நல்லவங்கடா. அன்று தொடங்கி இன்று வரை தொடர்கிறது இந்த கதை.

இலங்கையிலேயே மலையகத்தில் தான் அதிகளவு மதுபானக்கடைகள் இருக்கின்றனவாம். ஒரு வேளை ப்ளேன் பன்னி பன்றாய்ங்களோ. எது எப்படியோ, குடிப்பழக்கமே எங்கள் முன்னேற்றத்துக்கு ஓர் பெரிய தடை என்பது மட்டும் உண்மை. மலையகத்தின் அரசியலுக்கும் குடிப்பழக்கம் தான் முதுகெலும்பு. சாராயம் இல்லை எனில் பாராளுமன்றத்தில் கிடைக்கும் ஓரிரண்டு seats ம் கிடைக்காமல் போய் விடும். அத்தோடு மலையகத்தலை(வர்)களும் குடியை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதர்க்கிறார்கள். ஏனா, குடிக்காட்டி படிப்பான், படிச்சா ஓட்டு போச்சு.

சாதரணமாக பள்ளிக்காலத்திலேயே தொடங்கி விடுகிறார்கள் நம்ம நண்பர்கள். நான் தரம் பதினொன்று படிக்கையில் என் வகுப்பில் முக்கல்வாசிக்கு மேல் குடிக்க தொடங்கி விட்டார்கள். பத்து வருடங்கள் கழிந்தாயிற்று. இப்போது தரம் ஆறிலேயே தொடங்குவானுங்களா இருக்கும்.

நான் அப்பாவுடன் பேசுவதே குறைவு, அதிலும் அரசியல் பற்றி பேசுவது மிகவும் குறைவு. அவருக்கும் அரசியல் interest இல்லை. ஆனால் அங்கிங்கு கேட்டவற்றில் இருந்து அவரும் இளரத்தமாக இருந்த போது அரசியலில் ஈடுபாட்டிருப்பார் என்று யூகித்துகொண்டேன். அவர் சொன்ன விசயத்துக்கு வருவோம். அப்பாவின் close நண்பரின் சகோதரர் ஒருவர் திறமையான அரசியல்வாதியாம். முக்கியமாக படித்த அரசியல்வாதியாம். அவர் அல்பாயுசுலேயே போய் சேந்துட்டாராம். ஏன் என்று  கேட்டதற்கு, அவரை மற்ற அரசியல்வாதிகள் குடிக்க வைத்தே கொன்றுவிட்டார்கள் என்றார். என்ன கொடும சார்! அருமை. குடித்தவரை குறை சொல்வதா, இல்லை குடிக்க கொடுத்தவரை குறை சொல்வதா????

இதே கதைதான் தொடர்கிறது எங்கள் மலையகத்தில். இதற்கு யார் பொறுப்பு, யாரால் இதை தடுக்க முடியும், என்று என் இனத்துக்கு விடுதலை கிடைக்கும்???.. . என் தலைமுறையாவது இதை புரிந்துகொண்டு எங்கள் இனத்தின் விடிவுக்கு வழிகோல வேண்டும்.

please leave comments.