Saturday, December 4, 2010

ச்சும்மா.........

நான் blogging இற்கு புதியவன் அல்ல. முன்னர் பல blogs தொடங்கினேன். ஆனால் எதையுமே நீண்ட நாட்கள் தொடரவில்லை. அதற்கெல்லாம் காரணம் blogging இல் பணம் சம்பாரிக்கலாம் என்ற நோக்கத்தோடு இறங்கினேன். அனால் முடியாமல் போய் விடவே அப்படியே விட்டு விட்டேன். அதனால் தான் இந்த முறை எனது blog இல் advertisements போடுவதில்லை என்ற முடிவோடு தொடங்கியிருக்கிறேன். பாப்போம் எப்பு....டி போகுதுனு.

Blog செய்வதற்கு topic இல்லாமல் தவிக்கிறேன். mmm...என்ன செய்ய, முதல் blog இற்கு கொஞ்சம் response வந்து உசுப்பேத்தி விட்டுவிட்டது. அடுத்த மாதம் இறுதியாண்டு பரீட்சைகள் இருக்கின்றது, Chitti சார் (நம்ம enthiran) தான் காப்பாத்தணும்.

என்னை பற்றி கொஞ்சம். நான் கருப்பா, கட்டையா, குண்டா இருப்பேன். பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயில்கிறேன். முடித்தவுடன் நான் பிறந்து வளர்ந்த இந்த மலையகத்திற்கு என் உயிருள்ளவரை சேவையாற்றுவதே என் வாழ்வின் குறிக்கோள் அப்டி சொல்ல மாட்டேன். இப்புடி சொல்லிக்கிட்டு நிறைய பேர் கிழம்பியிருக்காய்ங்கடா. அவர்கள் செய்யட்டும். நான் என்னால் முடிந்ததை செய்வேன். மற்றபடி நன்கு சம்பாதித்து, கல்யாணம் முடித்து எல்லோரையும் போலவே சாதாரண வாழ்க்கையே வாழ விரும்புகிறேன்.

Blogging என்பது ஒரு கொடுமை தான். என்ன மாதிரி எத்தன பேர் கிளம்பியிருக்காய்ங்களோ தெரியல. இந்த கொடுமை எல்லாம் வாசிக்க வேண்டி இருக்குது. ஆனால் உண்மையாகவே fun ஆக இருக்கின்றது.

வாசித்தால் மறக்காமல் ஏசி விட்டு செல்லுங்கள், உங்கள் நேரத்தை வீனடித்தமைக்கு. :-)

2 comments:

  1. brother..All the best..first u concentrate wt ur studies..meantime u can give best of ur blogs..dont give up tz time..good luck..!!

    ReplyDelete