Saturday, December 4, 2010

திரை விமர்சனங்கள் பற்றி.....

இன்று காலை நந்தலாலா மற்றும் பல திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களை பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒரே யோசனையாக இருந்தது. ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக விமர்சித்து இருக்கிறார்கள். யாவையும் வாசிப்பதற்கு jolly ஆக இருந்தது. எனக்கென்னவோ ஒரே உறுத்தல். திரைப்படங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கிறார்களோ தெரியவில்லை. இவர்கள் என்னவோ மனசுக்கு வந்தபடி திட்டித்தீர்க்கிறார்கள். அதிலும் ரொம்பவே கொடுமை எந்திரனையும் நந்தலாலாவையும் ஒப்பிட்டு விமர்சித்து இருந்தார்கள். என்ன கொடும சார்.

எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இது போன்ற விமர்சனங்களால் படம் எடுப்பவர்களுக்கோ, அதை விமர்சிப்பவர்களுக்கோ எது வித நன்மையோ தீமையோ வந்துவிடாது. ஆனால் பாதிக்கபடுபவர்கள் யார்??.. ஹலோ சார், என்ன யோசிக்குறீங்க???.. அது நாமதான் சார்... எங்கள் பொன்னான நேரத்தை வீனடித்துக்கொண்டு இவற்றை எல்லாம் வாசிக்கிறோம். அதிலும் என்னைப்போன்றவர்கள் ரொம்பவே முட்டாள்கள். அதை வாசித்துவிட்டு, அதற்கு ஒரு விமர்சனம் வேறு எழுதுகின்றோம். Double time waste.

எதுவாக இருந்தாலும் சரி, என்னை பொருத்தவரை எந்த ஒரு திரைப்படமானாலும் பரவாயில்லை. நடிப்பர்வர்கள் பற்றியோ, இயக்குனர் பற்றியோ, camera man, music director, etc. .. யாரை பற்றியுமே கவலை இல்லை. அனால் ஒரு திரைப்படம் பார்க்கிறவர்களை இரண்டரை மணிநேரம், எல்லாவற்றையும் மறந்துவிட்டு enjoy பண்ணுவதற்கு வழிவகுத்தால் போதும். அது விஜய் படமானாலும் சரி, ரஜினி படமானாலும் சரி.

விஜய் ஐ விமர்சிப்பவர்கள் மீது எனக்கு உடன் பாடில்லை. ஏனா, அவரது ரசிகர்கள் அவரை திரையில் கண்டு கும்மாளமிட்டு படத்தை enjoy பன்னி விட்டு தான் போவார்கள். அதில் இழப்பவர்கள் விஜய் ஐ விமர்சிப்பவர்கள் தான்.

சார் சொந்த அனுபவம் சார். அடுத்த மாதம் பரீட்சை என்பதால் ரொம்ப நாள் படங்கள் பார்க்கவில்லை. அனால் நேற்று ச்சும்மா ஒரு படம் பார்த்தேன். செம relax ஆக இருந்தது. அது தான் சார் ஊருக்கு உபதேசம் பண்ண கிளம்பிட்டேன். எந்த படம் என்பது முக்கியமில்லை. நாங்கள் enjoy பண்ணுவதில் தான் உள்ளது. என்ன இருந்தாலும் நம்ம காசு இல்லியா. அது நாலா நாங்க மோசமான திரைப்படம இருந்தாலும் சரி. enjoy பன்னி விட்டு வருவோம். இல்லாட்டி ஏசி ஏசி நம்ம health தான் வீனா போகும்.

வாசிச்சிட்டு நீங்க என்னை ஏசுங்க.

3 comments:

  1. Unmai than anbarae ovvoruvar vimarsanamum padithal mandai kulampuvathu uruthi

    ReplyDelete
  2. ஒவ்வொரு விமர்சகருகளுக்கும் ஒவ்வொரு பீலிங் நண்பரே!

    உங்கள் பதிவில் எழுத்துப் பிழைகள் உள்ளன (ஆரமபத்தில் எனக்கும் இருந்தது), அதை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் நண்பரே.

    ReplyDelete
  3. okay baass... blogging unmayave sema fun,. ivlo naal mis panitene...

    ReplyDelete