இலங்கையின் மத்தியில், உச்சியில் குளுகுளுவென்று அமைந்திருக்கின்றது அழகிய மலையகம். அழகிற்கு இங்கு குறையில்லை. இன்னொரு special என்னவெனில், குடித்தே கெட்ட ஒரு தமிழினம் இங்கு வாழ்கிறது.
அந்த அரும்பெரும் இனத்துக்கு ஒரு சின்ன intro. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மாசிக்கு ஆசைப்பட்டு இந்தியவிலுருந்து குடும்பம் குடும்பமாய் வந்து சேர்ந்திருக்கிறார்கள் எமது முன்னோர்கள். மலையகத்தில் ஏது மாசி? ஆனால் வெள்ளைக்காரர்கள் ரெடியாக வைத்திருந்தார்கள் மாசியை விட சூப்பர் item ஒன்றை. எமது முன்னோர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மதுவிற்கு அடிமையானார்கள். ரொம்ம்ப நல்லவங்கடா. அன்று தொடங்கி இன்று வரை தொடர்கிறது இந்த கதை.
இலங்கையிலேயே மலையகத்தில் தான் அதிகளவு மதுபானக்கடைகள் இருக்கின்றனவாம். ஒரு வேளை ப்ளேன் பன்னி பன்றாய்ங்களோ. எது எப்படியோ, குடிப்பழக்கமே எங்கள் முன்னேற்றத்துக்கு ஓர் பெரிய தடை என்பது மட்டும் உண்மை. மலையகத்தின் அரசியலுக்கும் குடிப்பழக்கம் தான் முதுகெலும்பு. சாராயம் இல்லை எனில் பாராளுமன்றத்தில் கிடைக்கும் ஓரிரண்டு seats ம் கிடைக்காமல் போய் விடும். அத்தோடு மலையகத்தலை(வர்)களும் குடியை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதர்க்கிறார்கள். ஏனா, குடிக்காட்டி படிப்பான், படிச்சா ஓட்டு போச்சு.
சாதரணமாக பள்ளிக்காலத்திலேயே தொடங்கி விடுகிறார்கள் நம்ம நண்பர்கள். நான் தரம் பதினொன்று படிக்கையில் என் வகுப்பில் முக்கல்வாசிக்கு மேல் குடிக்க தொடங்கி விட்டார்கள். பத்து வருடங்கள் கழிந்தாயிற்று. இப்போது தரம் ஆறிலேயே தொடங்குவானுங்களா இருக்கும்.
நான் அப்பாவுடன் பேசுவதே குறைவு, அதிலும் அரசியல் பற்றி பேசுவது மிகவும் குறைவு. அவருக்கும் அரசியல் interest இல்லை. ஆனால் அங்கிங்கு கேட்டவற்றில் இருந்து அவரும் இளரத்தமாக இருந்த போது அரசியலில் ஈடுபாட்டிருப்பார் என்று யூகித்துகொண்டேன். அவர் சொன்ன விசயத்துக்கு வருவோம். அப்பாவின் close நண்பரின் சகோதரர் ஒருவர் திறமையான அரசியல்வாதியாம். முக்கியமாக படித்த அரசியல்வாதியாம். அவர் அல்பாயுசுலேயே போய் சேந்துட்டாராம். ஏன் என்று கேட்டதற்கு, அவரை மற்ற அரசியல்வாதிகள் குடிக்க வைத்தே கொன்றுவிட்டார்கள் என்றார். என்ன கொடும சார்! அருமை. குடித்தவரை குறை சொல்வதா, இல்லை குடிக்க கொடுத்தவரை குறை சொல்வதா????
இதே கதைதான் தொடர்கிறது எங்கள் மலையகத்தில். இதற்கு யார் பொறுப்பு, யாரால் இதை தடுக்க முடியும், என்று என் இனத்துக்கு விடுதலை கிடைக்கும்???.. . என் தலைமுறையாவது இதை புரிந்துகொண்டு எங்கள் இனத்தின் விடிவுக்கு வழிகோல வேண்டும்.
please leave comments.
No comments:
Post a Comment