Saturday, January 22, 2011

அன்டன் செகோவின்(Anton Chekhov) சிறுகதைகள் - விசாரணை (An Inquiry)


நடுப்பகல் வேளை. உயரமான, பருத்த, வெட்டிய தலைமயிருடனும், பிதுங்கிய விழிகளுடனும் கூடிய ஒரு நாட்டுப்புற கனவான் வால்த்ய்ரேவ், தனது மேற்சட்டையை கழற்றியவாறு, பட்டு துணியாலான கைக்குட்டையை கொண்டு நெற்றியை துடைத்தவாறே அரச காரியாலயத்தினுள் சற்றே தயங்கியவாறே உள்ளே சென்றார். அங்கு அவர்கள் ஏதோ எழுதியவண்ணம் இருக்கின்றார்கள்....

"இங்கு எவ்விடத்தில் விசாரிக்கலாம்" என்று கையில் தட்டு நிறைய குவளைகளுடன் அலுவலகத்தின் ஒரு மூலையிலிருந்து வரும் ஒரு சேவகனை பார்த்து வினவுகிறார். 'நான் இங்கு ஒரு தகவலை தெரிந்து கொண்டு அவையினால் வழங்கப்பட்ட தீர்வின் நகல் ஒன்றினை எடுத்து செல்ல வேண்டும்'

"அங்கே, அந்த ஜன்னலுக்கு அருகில் அம்ர்ந்திருப்பவரிடம் செல்லுங்கள்' என்று தனது கையிலுள்ள தட்டினால் தூரத்தில் இருக்கும் ஜன்னலை காட்டுகிறான் சேவகன். வோல்த்ய்ரேவ் இருமியவாறே ஜன்னலை நோக்கி செல்கிறார்; அங்கு, typhus போல் புள்ளிகளுடன் (typhus நோயில் தோலில் வரும் கரப்பான் போல்) கூடிய பச்சை நிற மேசை இருக்குமிடத்தில் நான்கு குடுமிகள் கொண்ட தலையுடன் கூடிய, நீண்ட பருக்கள் நிறைந்த மூக்கும் இளமை நிரம்பிய ஒரு ஆடவன் தனது மங்கிப்போன சீருடையுடன் அமர்ந்திருப்பதை காண்கிறார். அவர் தன் நீண்ட மூக்கை தாளினுள் நுழைத்துக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறார். அவரது வலது மூக்குத்துவாரத்துக்கு அருகில் ஒரு ஈ நடந்துகொண்டிருக்கிறது. அவர் தன் கீழ் உதட்டை முன்னால் தள்ளி தன் மூக்கை நோக்கி தொடர்ந்து ஊதிக்கொண்டிருக்கும் காட்சி அவர் மிகவும் அக்கறையுடன் வேலை பார்ப்பது போன்ற முகபாவத்துடன் தென்பட்டார்.

"நான் எனது வழக்கு தொடர்பாக இங்கே விசாரிக்கலாமா?... உங்களிடம்? எனது பெயர் வால்த்ய்ரேவ், அத்துடன் மார்ச் இரண்டாம் திகதியிடப்பட்ட தீர்வின் நகலொன்றும் தேவை."

எழுத்தர்(clerk) பேனையை மையில் தோய்த்து எடுத்து அதிகம் வந்துவிட்டதோ என்று பார்க்கிறார். பேனை ஒற்றாது என்று திருப்தியடைந்தவுடன் மீண்டும் எழுத தொடங்குகிறார். அவரது உதடு இன்னும் பிதுங்கிய வண்ணமே இருக்கிறது, ஆனால் ஊதுவதற்கு அவசியம் இருக்கவில்லை: ஈ அவரின் காதில் உட்கார்ந்துவிட்டது.

"நான் இங்கே விசாரிக்கலாமா?" வால்த்ய்ரேவ் ஒரு நிமிடத்தின் பின் மீண்டும் கேட்கிறார், "என் பெயர் வால்த்ய்ரேவ், நான் ஒரு நில உரிமையாளன்....."

"இவான் அளெக்ஸ்ய்ச்!" எழுத்தர் வால்த்ய்ரேவ் ஐ கவனிக்காதவரைப்போல கத்துகிறார், "வர்த்தகர் யாளிகோவ் வரும்போது போலீசில் செய்த முறையீட்டில் கையெழுத்திட சொல்லி விடு! அவருக்கு ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன்!"

"இளவரசி குகுளின் இன் வாரிசுகளுக்கு எதிராக நான் தொடுத்த வழக்கு தொடர்பாக வந்துள்ளேன்," முணுமுணுக்கிறார் வால்த்ய்ரேவ். "அது ஒரு பிரபலமான வழக்கு. என்னை கவனிக்குமாறு உங்களை வேண்டுகிறேன்."

வால்த்ய்ரேவ் ஐ கவனிக்காத எழுத்தர், தனது உதட்டில்லுள்ள ஈயை கவனித்து அதனை விரட்டுகிறார். நாட்டுப்புற கனவான் இருமி விட்டு தனது கைக்குட்டையை எடுத்து பலமாக மூக்கை சிந்துகிறார். ஆனால் அதுவும் உதவவில்லை. இன்னும் அவருக்கு கேட்கவில்லை. இரண்டு நிமடிங்களுக்கு அமைதி நிலவியது. வால்த்ய்ரேவ் ஒரு ரூபிள் நோட்டினை சட்டைப்பையினுள் இருந்து எடுத்து எழுத்தருக்கு முன்னாள் இருந்த திறந்துகிடக்கும் புத்தகத்தினுள் வைக்கிறார். எழுத்தர் நெற்றியை சுளித்துக்கொண்டு விரைவாக புத்தகத்தை தன் பக்கம் இழுத்து மூடிக்கொள்கிறார்.

"ஒரு சிறிய தகவல்... எதனடிப்படையில் இளவரசி குகுளினின் வாரிசுகள்... என்று மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும்.... உங்களை தொந்தரவு செய்யலாமா?"

எழுத்தர் ஏதோ சிந்தனையில் மூல்கிப்போனார், முழங்கையை சொரிந்தவாறே எழுந்து அலமாரியை நோக்கி செல்கிறார். ஒரு நிமடத்திற்கு பின் திரும்பி வருகையில் புத்தகத்தை கவனிக்கிறார்: இன்னொரு ரூபிள் நோட்டு கிடக்கிறது.

"நான் உங்களை ஒரு நிமிடம் மட்டுமே தொந்தரவு செய்வேன்... நான் ஒரு தகவலை மட்டுமே தேர்ந்து கொள்ள வேண்டும்."

எழுத்தருக்கு கேட்கவில்லை, அவர் எதையோ பிரதியெடுக்க ஆரம்பித்து விட்டார்.

வால்த்ய்ரேவ் முகத்தை சுளித்துக்கொண்டு நம்பிக்கையற்ற பார்வையோடு எழுதிக்கொண்டிருக்கும் சகோதரனை பார்க்கின்றார்.

"எல்லோரும் எழுதுவார்கள்" அவர் நினைக்கிறார் பெருமூச்செரிந்தவாறே, "பேய் பிடித்தவரைப்போல எழுதுவார்கள்!".

அவர் மேசையை விட்டு விலகி சென்று அறையின் நடுவில் நிற்கிறார், அவரின் கைகள் இரு பக்கமும் நம்பிக்கையின்றி தொங்கிக்கொண்டிருக்கின்றன. சேவகன், மீண்டும் கையில் குவளைகளுடன் கடந்து செல்லும்போது, அவரின் உதவியற்ற முகத்தை காண்கிறான், அவன் மெல்ல அவரினருகே சென்று தாழ்ந்த குரலில் கேட்கிறான்:

"நீங்கள் தகவலை பெற்றுக்கொண்டீர்களா?"

"நான் விசாரித்தேன், ஆனால் அவர் என்னுடன் பேசவில்லை."

"நீங்கள் அவருக்கு மூன்று ரூபிள் கொடுங்கள்", என்று காதோடு கூறினான் சேவகன்.

"நான் ஏற்கனவே இரண்டு ரூபிள் கொடுத்துவிட்டேன்."

"இன்னொன்று கொடுங்கள்."

வால்த்ய்ரேவ் மீண்டும் மேசையினருகே சென்று ஒரு பச்சை நோட்டை திறந்து கிடக்கும் புத்தகத்தில் வைக்கின்றார்.

எழுத்தர் புத்தகத்தை தன்பால் இழுத்து பக்கங்களை புரட்ட தொடங்குகிறார், திடீரென கண்களை உயர்த்தி இப்போது தான் வால்த்ய்ரேவ் ஐ பார்ப்பது போல் பார்க்கின்றார். அவரின் மூக்கு சிவப்பாக மாறி மின்னத்தொடங்குகின்றது. அவர் புன்னகைக்கின்றார்.

"ஆ... உங்களுக்கு என்ன வேண்டும்" அவர் கேட்டார்.

"நான் எனது வழக்கு தொடர்பாக ஒரு தகவலை பெற வேண்டும்.... நான் வால்த்ய்ரேவ்."

"கட்டாயமாக! குகுளின் வழக்கு தானே? நன்று. உங்களுக்கு என்ன காரியம் ஆக வேண்டும்."

வால்த்ய்ரேவ் தான் வந்த விடயத்தை சொல்லி முடித்தார்.

சுழல் காற்று அடித்ததைப்போல எழுத்தர் மிகவும் உட்சாகமாகிவிட்டார். அவர் தேவையான தகவல்களை வழங்கினார், அத்துடன் நகலோன்ரைப்பெறவும் ஏற்பாடு செய்தார், மனுதாரருக்கு இருக்கை கொடுத்தார், இவையெல்லாம் ஒரு கணப்பொழுதில் நடந்தன. அவர் காலநிலை மற்றும் அறுவடை பற்றியெல்லாம் கூட விசாரிக்கலானார். வால்த்ய்ரேவ் செல்லும்போது, எழுத்தர் அவருடன் மரியாதையாக புன்னகையுடன் படிகளில் இறங்கி சென்றார். இது வால்த்ய்ரேவ்க்கு சங்கடத்தை ஏற்படுத்தியது, தன்னுள் ஏற்பட்ட உணர்ச்சிவசப்படளுக்கு பணிந்து இன்னொரு ரூபிளை எடுத்து கொடுத்தார். எழுத்தர் பணிந்து புன்னகையுடன் பெற்றுகொள்கிறார்.

"என்ன மனிதர்கள்!" நாட்டுப்புற கனவான் வெளியே வீதிக்கு செல்லும் போது நினைத்தார், அவர் நின்று தன் கைக்குட்டையால் தன் நெற்றியை துடைத்தார்.


அன்பர்களே இது எனது கண்ணி முயற்சி. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Friday, January 21, 2011

முதலாமாண்டு எம் பி பி எஸ்....


இலங்கையின் மத்திய மலைநாட்டின் தலைநகர் என சொல்லப்படும் கண்டி நகருக்கு அருகாமையில் அமைந்திருக்கின்றது நான் தெரிவு செய்யப்பட்ட பல்கலைகழகம். இலங்கையின் Oxford, Cambridge, Harvard என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். அவ்வளவு சிறப்பு மிக்க பல்கலைக்கழகம். இயற்கை எழில் பொங்கும் அருமையான சூழலில் அமைந்திருக்கின்றது. வெள்ளைக்காரர் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அந்த காலத்திலேயே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மிகவும் கண்ணும் கருத்துமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நானும் சிறு வயதிலிருந்து கண்டி நகருக்கு செல்லும் போது எல்லாம் இந்த பல்கலைக்கழகத்தின் அழகை வாயில் நீர் சொட்ட சொட்ட பார்த்திருக்கிறேன். அம்மா, அப்பா எல்லாரும் சொல்லுவாங்க "நல்லா படி மகனே, அப்ப தான் இங்க வரலாம்" என்று. எப்படியோ படித்தாகிவிட்டது. கனவு கண்டது போல எனக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. கனவுகள் பொதிந்த இதயத்தோடு சென்றேன். இன்னொரு பக்கம் வாழ்க்கையில் settle ஆகிவிட்டது போல் ஒரு வித உணர்வு (அப்போதைய immature மனதிற்கு அப்படி தோன்றியது).

முதல் மூன்று மாதங்களுக்கு ஆங்கிலம் சொல்லி தருவார்கள். அதற்கு placement exam வைத்தார்கள். மெல்ல மெல்ல சுற்றி பார்த்தேன். எல்லாமே நன்றாக இருந்தது. புதுப்புது முகங்கள், புதிய சூழல் என எல்லாமே நன்றாக போய்கொண்டுடிருந்தது. எங்கள் immediate seniors இன் பழக்கம் கிடைத்தது. எனது சுதந்திரத்தில் அவர்கள் தலையிடுவது போல் உணர்ந்தேன். இரண்டு வாரங்களில் புரிய தொடங்கியது. என்னை அவர்கள் வழிக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் என்பது புரிந்தது. எங்களுக்கு வகுப்புகள் 8.30 மணிக்கு தான் தொடங்கும். அனால் அவர்கள் சொன்னார்கள் 7.00 மணிக்கு canteen க்கு வா என்று.

மூன்றாவது வாரம். எனடா இது வம்பா போச்சுன்னு நானும் இரண்டு மூன்று நாட்கள் சென்றேன். மெல்ல மெல்ல திட்ட தொடங்குகிறார்கள். Shirt அணி, belt கட்டாதே, watch கட்டாதே, shoe போடு என்று ஒவ்வொரு கட்டளை பிறப்பிக்க தொடங்கினார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒவ்வொன்றாக செய்ய தொடங்குகிறேன். 'விதிகள்' என்ற பெயரில் அவர்களது tradition களை எடுத்தியம்புகிறார்கள். அவர்கள் சொல்லிதத்ருவதை கேட்பதற்கு அருவருப்பாக இருக்கும். எப்படி சாப்பிடுவது, பேசுவது எப்படி, மலசலம் கழிப்பது எப்படி என சொல்லித்தருவார்கள். இன்னும் நிறைய சொல்லுவார்கள். நிறைய விஷயங்கள் மறந்துவிட்டது. மறக்க செய்தமைக்கு கடவுளுக்கு நன்றி.

நான்காவது வாரம். எனக்கு வெறுக்க தொடங்குகிறது. 'ஏண்டா இங்க வந்தோம்' என்று தோன்றியது. எனக்கு ஆரம்ப நாட்களிலேயே புரிய தொடங்கியது. ஆனால் பெரும்பான்மையானோருக்கு 3rd or 4th year இல் தான் புரியும். சில சமயங்களில் இதை சொல்லி நான் பெருமை அடித்து கொள்வதும் உண்டு. இவர்களது இந்த tradition இற்கு பெயர் சிங்களத்தில் 'நவக அனுறுபதா வெடசடகன்'. தமிழில் 'புதியவர்களை மறுசீரமைக்கும் திட்டம்'. ஆனால் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமலேயே அவர்களுடனேயே இருந்தேன். இல்லாவிட்டால் hostel இல் இருக்க விட மாட்டார்கள். முடிந்தவரை நான் தனியாகவே செயற்பட்டேன்.

அந்த சூழலில் எல்லாமே சூனியமாக தான் இருக்கும். நான் எது செய்தாலும் எல்லாரும் மூக்கை நுழைப்பார்கள். சுதந்திரமாக செயற்படவே விட மாட்டார்கள். இவ்வாறு நடந்து முடிய அங்கு சென்ற போது எனக்கு இருந்த நிறைய qualities காணாமல் போய் இருந்தது. உதாரணமாக, நான் school இல் இருக்கும் போது இனப்பாகுபாடு செய்து பார்ப்பது இல்லை. இங்கு வந்து முதலாவதாக நான் கற்று கொண்ட பாடம் எல்லோரையும் பிரித்து பார்ப்பது. சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று தனித்தனியாக பிரித்து பார்ப்பது. அதிலும் வடக்கு தமிழ், கிழக்கு தமிழ், மலயகத்தமிழ் என்று தனித்தனியாக தான் இருப்பார்கள். இதை தான் நான் முதலாவதாக படித்தேன். அடுத்து எனது ஆளுமை திறமைகள் எல்லாம் மழுங்கி போனது. ஆசிரியர்களுடன் சென்று பேசினால் வாலி வைக்கிறான் என்பார்கள். இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

இவ்வாறு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் போது செல்லும் போது இருந்ததை விட மோசமான ஒரு மனிதனாகவே வெளியேறுகிறோம். எங்கள் course கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் பெரும்பான்மையானோர் stuff-less மனிதர்களாகவே வெளியேறுகிறார்கள்.

அறுவை தொடரும்....

கமெண்ட்ஸ் ப்ளீஸ்...

Thursday, January 20, 2011

வந்துட்டேன்....

ஒன்றரை மாதங்களுக்கு பின் மீண்டும் வந்துட்டேன் blog செய்வதற்கு. அப்ப exam stress ல blogging செம fun ஆக இருந்திச்சு. ஆனா இப்ப ஒரு வேலையும் இல்ல. ஆனாலும் Blog பண்ணுவதற்கு செம போரிங் ஆ இருக்கு.

என்னுடைய ரசிகர் வட்டத்தின் (ஒரே ஒரு member தாங்கோ, என்னோட sweet heart) அன்பு வேண்டுகோளுக்கிணங்க நான் மீண்டும் blog பண்ண போறேன். 

exam முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன். நான் தான் எங்க வீட்டு driver. மூன்று நாட்களாக கொழும்பு பயணம். நேற்று வந்து லேப்டாப் ஐ போட்டால் வேல செய்யவில்லை. இன்று அதையும் செய்துகொண்டு நீண்ட நாட்களுக்கு பிறகு சில நண்பர்களை சந்தித்தேன். என் நண்பனின் குட்டி மகளின் சேட்டைகளோடு காலை வேலை இனிதே சென்றது. 

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. யாராவது நண்பர்களை கண்டாள் அவர்களது வயிற்றை பற்றி கிண்டலடிக்காமல் இருக்க முடியவில்லை. exam க்கு முன்னர் நானும் அளவாக தான் இருந்தேன். அனால் இப்போது நானும் பெரிய வயிற்றுக்கு சொந்தக்காரனாகிவிட்டேன். exam முடிந்ததும் முதல் வேலையாக வயிற்றை குறைக்க நினைத்தேன். ஆனால் இனி இந்த பிறவியில் அது நடக்கவே நடக்காது போல் இருக்கிறது.  சரி பாப்போம், சீனி நோய் வந்தாவது குறைகிறதா என்று. 

exam முடித்து வந்தவுடன் சாரு நிவேதிதாவின் கடவுளும் நானும் என்ற புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த புத்தகத்தை முழுதாக வாசிக்கவில்லை. அறுவையாக இருந்தது. அவருடைய blog இற்கு சென்று பார்த்தேன். நிறைய பதிவுகள் இருந்தது. அவர் பல்வேறு பட்ட புத்தகங்களுக்கு அறிமுகம் தருகிறார். அவ்வாறு நான் சென்றடைந்தது தான் அன்டன் செகொவின் (Anton Chekov) சிறுகதைகள். லிங்க் தருகிறேன். 201 கதைகள் இருக்கின்றன. 10 கதைகள் வாசித்து விட்டேன். இன்னும் 191  இருக்கிறது. அனைத்தையும் வாசித்து முடிக்க ஆசை. பார்ப்போம் ஆசை நடக்கிறதா என்று.

இனி தொடர்ந்து அறுப்பேன்....

வாழ்த்துக்கள்....