Showing posts with label அன்டன் செகோவ். Show all posts
Showing posts with label அன்டன் செகோவ். Show all posts

Saturday, January 22, 2011

அன்டன் செகோவின்(Anton Chekhov) சிறுகதைகள் - விசாரணை (An Inquiry)


நடுப்பகல் வேளை. உயரமான, பருத்த, வெட்டிய தலைமயிருடனும், பிதுங்கிய விழிகளுடனும் கூடிய ஒரு நாட்டுப்புற கனவான் வால்த்ய்ரேவ், தனது மேற்சட்டையை கழற்றியவாறு, பட்டு துணியாலான கைக்குட்டையை கொண்டு நெற்றியை துடைத்தவாறே அரச காரியாலயத்தினுள் சற்றே தயங்கியவாறே உள்ளே சென்றார். அங்கு அவர்கள் ஏதோ எழுதியவண்ணம் இருக்கின்றார்கள்....

"இங்கு எவ்விடத்தில் விசாரிக்கலாம்" என்று கையில் தட்டு நிறைய குவளைகளுடன் அலுவலகத்தின் ஒரு மூலையிலிருந்து வரும் ஒரு சேவகனை பார்த்து வினவுகிறார். 'நான் இங்கு ஒரு தகவலை தெரிந்து கொண்டு அவையினால் வழங்கப்பட்ட தீர்வின் நகல் ஒன்றினை எடுத்து செல்ல வேண்டும்'

"அங்கே, அந்த ஜன்னலுக்கு அருகில் அம்ர்ந்திருப்பவரிடம் செல்லுங்கள்' என்று தனது கையிலுள்ள தட்டினால் தூரத்தில் இருக்கும் ஜன்னலை காட்டுகிறான் சேவகன். வோல்த்ய்ரேவ் இருமியவாறே ஜன்னலை நோக்கி செல்கிறார்; அங்கு, typhus போல் புள்ளிகளுடன் (typhus நோயில் தோலில் வரும் கரப்பான் போல்) கூடிய பச்சை நிற மேசை இருக்குமிடத்தில் நான்கு குடுமிகள் கொண்ட தலையுடன் கூடிய, நீண்ட பருக்கள் நிறைந்த மூக்கும் இளமை நிரம்பிய ஒரு ஆடவன் தனது மங்கிப்போன சீருடையுடன் அமர்ந்திருப்பதை காண்கிறார். அவர் தன் நீண்ட மூக்கை தாளினுள் நுழைத்துக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறார். அவரது வலது மூக்குத்துவாரத்துக்கு அருகில் ஒரு ஈ நடந்துகொண்டிருக்கிறது. அவர் தன் கீழ் உதட்டை முன்னால் தள்ளி தன் மூக்கை நோக்கி தொடர்ந்து ஊதிக்கொண்டிருக்கும் காட்சி அவர் மிகவும் அக்கறையுடன் வேலை பார்ப்பது போன்ற முகபாவத்துடன் தென்பட்டார்.

"நான் எனது வழக்கு தொடர்பாக இங்கே விசாரிக்கலாமா?... உங்களிடம்? எனது பெயர் வால்த்ய்ரேவ், அத்துடன் மார்ச் இரண்டாம் திகதியிடப்பட்ட தீர்வின் நகலொன்றும் தேவை."

எழுத்தர்(clerk) பேனையை மையில் தோய்த்து எடுத்து அதிகம் வந்துவிட்டதோ என்று பார்க்கிறார். பேனை ஒற்றாது என்று திருப்தியடைந்தவுடன் மீண்டும் எழுத தொடங்குகிறார். அவரது உதடு இன்னும் பிதுங்கிய வண்ணமே இருக்கிறது, ஆனால் ஊதுவதற்கு அவசியம் இருக்கவில்லை: ஈ அவரின் காதில் உட்கார்ந்துவிட்டது.

"நான் இங்கே விசாரிக்கலாமா?" வால்த்ய்ரேவ் ஒரு நிமிடத்தின் பின் மீண்டும் கேட்கிறார், "என் பெயர் வால்த்ய்ரேவ், நான் ஒரு நில உரிமையாளன்....."

"இவான் அளெக்ஸ்ய்ச்!" எழுத்தர் வால்த்ய்ரேவ் ஐ கவனிக்காதவரைப்போல கத்துகிறார், "வர்த்தகர் யாளிகோவ் வரும்போது போலீசில் செய்த முறையீட்டில் கையெழுத்திட சொல்லி விடு! அவருக்கு ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன்!"

"இளவரசி குகுளின் இன் வாரிசுகளுக்கு எதிராக நான் தொடுத்த வழக்கு தொடர்பாக வந்துள்ளேன்," முணுமுணுக்கிறார் வால்த்ய்ரேவ். "அது ஒரு பிரபலமான வழக்கு. என்னை கவனிக்குமாறு உங்களை வேண்டுகிறேன்."

வால்த்ய்ரேவ் ஐ கவனிக்காத எழுத்தர், தனது உதட்டில்லுள்ள ஈயை கவனித்து அதனை விரட்டுகிறார். நாட்டுப்புற கனவான் இருமி விட்டு தனது கைக்குட்டையை எடுத்து பலமாக மூக்கை சிந்துகிறார். ஆனால் அதுவும் உதவவில்லை. இன்னும் அவருக்கு கேட்கவில்லை. இரண்டு நிமடிங்களுக்கு அமைதி நிலவியது. வால்த்ய்ரேவ் ஒரு ரூபிள் நோட்டினை சட்டைப்பையினுள் இருந்து எடுத்து எழுத்தருக்கு முன்னாள் இருந்த திறந்துகிடக்கும் புத்தகத்தினுள் வைக்கிறார். எழுத்தர் நெற்றியை சுளித்துக்கொண்டு விரைவாக புத்தகத்தை தன் பக்கம் இழுத்து மூடிக்கொள்கிறார்.

"ஒரு சிறிய தகவல்... எதனடிப்படையில் இளவரசி குகுளினின் வாரிசுகள்... என்று மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும்.... உங்களை தொந்தரவு செய்யலாமா?"

எழுத்தர் ஏதோ சிந்தனையில் மூல்கிப்போனார், முழங்கையை சொரிந்தவாறே எழுந்து அலமாரியை நோக்கி செல்கிறார். ஒரு நிமடத்திற்கு பின் திரும்பி வருகையில் புத்தகத்தை கவனிக்கிறார்: இன்னொரு ரூபிள் நோட்டு கிடக்கிறது.

"நான் உங்களை ஒரு நிமிடம் மட்டுமே தொந்தரவு செய்வேன்... நான் ஒரு தகவலை மட்டுமே தேர்ந்து கொள்ள வேண்டும்."

எழுத்தருக்கு கேட்கவில்லை, அவர் எதையோ பிரதியெடுக்க ஆரம்பித்து விட்டார்.

வால்த்ய்ரேவ் முகத்தை சுளித்துக்கொண்டு நம்பிக்கையற்ற பார்வையோடு எழுதிக்கொண்டிருக்கும் சகோதரனை பார்க்கின்றார்.

"எல்லோரும் எழுதுவார்கள்" அவர் நினைக்கிறார் பெருமூச்செரிந்தவாறே, "பேய் பிடித்தவரைப்போல எழுதுவார்கள்!".

அவர் மேசையை விட்டு விலகி சென்று அறையின் நடுவில் நிற்கிறார், அவரின் கைகள் இரு பக்கமும் நம்பிக்கையின்றி தொங்கிக்கொண்டிருக்கின்றன. சேவகன், மீண்டும் கையில் குவளைகளுடன் கடந்து செல்லும்போது, அவரின் உதவியற்ற முகத்தை காண்கிறான், அவன் மெல்ல அவரினருகே சென்று தாழ்ந்த குரலில் கேட்கிறான்:

"நீங்கள் தகவலை பெற்றுக்கொண்டீர்களா?"

"நான் விசாரித்தேன், ஆனால் அவர் என்னுடன் பேசவில்லை."

"நீங்கள் அவருக்கு மூன்று ரூபிள் கொடுங்கள்", என்று காதோடு கூறினான் சேவகன்.

"நான் ஏற்கனவே இரண்டு ரூபிள் கொடுத்துவிட்டேன்."

"இன்னொன்று கொடுங்கள்."

வால்த்ய்ரேவ் மீண்டும் மேசையினருகே சென்று ஒரு பச்சை நோட்டை திறந்து கிடக்கும் புத்தகத்தில் வைக்கின்றார்.

எழுத்தர் புத்தகத்தை தன்பால் இழுத்து பக்கங்களை புரட்ட தொடங்குகிறார், திடீரென கண்களை உயர்த்தி இப்போது தான் வால்த்ய்ரேவ் ஐ பார்ப்பது போல் பார்க்கின்றார். அவரின் மூக்கு சிவப்பாக மாறி மின்னத்தொடங்குகின்றது. அவர் புன்னகைக்கின்றார்.

"ஆ... உங்களுக்கு என்ன வேண்டும்" அவர் கேட்டார்.

"நான் எனது வழக்கு தொடர்பாக ஒரு தகவலை பெற வேண்டும்.... நான் வால்த்ய்ரேவ்."

"கட்டாயமாக! குகுளின் வழக்கு தானே? நன்று. உங்களுக்கு என்ன காரியம் ஆக வேண்டும்."

வால்த்ய்ரேவ் தான் வந்த விடயத்தை சொல்லி முடித்தார்.

சுழல் காற்று அடித்ததைப்போல எழுத்தர் மிகவும் உட்சாகமாகிவிட்டார். அவர் தேவையான தகவல்களை வழங்கினார், அத்துடன் நகலோன்ரைப்பெறவும் ஏற்பாடு செய்தார், மனுதாரருக்கு இருக்கை கொடுத்தார், இவையெல்லாம் ஒரு கணப்பொழுதில் நடந்தன. அவர் காலநிலை மற்றும் அறுவடை பற்றியெல்லாம் கூட விசாரிக்கலானார். வால்த்ய்ரேவ் செல்லும்போது, எழுத்தர் அவருடன் மரியாதையாக புன்னகையுடன் படிகளில் இறங்கி சென்றார். இது வால்த்ய்ரேவ்க்கு சங்கடத்தை ஏற்படுத்தியது, தன்னுள் ஏற்பட்ட உணர்ச்சிவசப்படளுக்கு பணிந்து இன்னொரு ரூபிளை எடுத்து கொடுத்தார். எழுத்தர் பணிந்து புன்னகையுடன் பெற்றுகொள்கிறார்.

"என்ன மனிதர்கள்!" நாட்டுப்புற கனவான் வெளியே வீதிக்கு செல்லும் போது நினைத்தார், அவர் நின்று தன் கைக்குட்டையால் தன் நெற்றியை துடைத்தார்.


அன்பர்களே இது எனது கண்ணி முயற்சி. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.